தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் பாதை அமைப்பு

ஏழை மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் பாதை அமைப்பு

ஏழை மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் பாதை அமைப்பு


UPDATED : அக் 19, 2011 12:00 AM

ADDED : அக் 19, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2011 12:00 AM ADDED : அக் 19, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் எப்போதுமே பொருளாதார சிக்கலில் சிக்கியே கல்விக்கரை சேருவர். அவர்களுக்கெல்லாம் கல்லூரிப் படிப்பு என்பது வெறும் கனவாகவே போய்விடும்.

பள்ளிப்படிப்பின் போது, சத்துணவு, சீருடை, பாடபுத்தகங்கள், மிதிவண்டி, பஸ்பாஸ் போன்றவற்றை அரசே தந்து விடுவதால், ஒருவழியாக பள்ளிப்படிப்பை முடித்து விடுகின்றனர்.

ஆனால், கல்லூரி படிப்பு என்பது தேர்வுக்கட்டணம், பாடபுத்தகங்கள், நல்ல ஆடைகள் போன்றவற்றால் ஆடம்பரமாக பார்க்கப்படுகிறது. இதனால், படிக்கக் கூடிய திறமை இருந்தும், தங்கள் திறமைக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு வேலைக்கு செல்கின்றனர். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு உதவ சென்னை சூளைமேட்டில் பாதை நல அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

இலவசம் என்கிற பெயரில் கண்டதையும் கொடுத்து, மேலும், அவர்களை பலவீனமாக்காமல், தங்கள் எதிர்காலத்தை தாங்களாகவே எதிர்கொள்ளும் ஆயுதமான கல்வியை கற்றுக் கொள்ள, வழிவகை செய்வதை தங்கள் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது பாதை அமைப்பு.

ஆதரவற்றோர் ஆசிரமங்கள் அதிகரிப்பிற்கும், வறுமைக்கும் முதல் காரணம், சரியான படிப்பறிவின்மையும் வேலையின்மையும்தான். இதை அதிகரித்து விட்டால் மற்றவைகள் தானாகவே சரியாகிவிடும். "நல்ல கல்வி நல்ல வேலைவாய்ப்பைத் தரும்" என்கிற அடிப்படையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பை தொடர முடியாதவர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் கல்லூரிக்கு செல்ல வழிவகை செய்கின்றனர், பாதை அமைப்பினர்.

கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டபடிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, புத்தகங்களை இலவசமாகவே வழங்குகின்றனர். மேலும், கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பை பொறுக்குதல் இன்னபிற வேலைகளைச் செய்யும் சிறுவர்களுக்கென முறைசாரா கல்வியையும் நடைமுறைப்படுத்தி வருகிறது பாதை.

"பெற்றோர் சரியில்லாத குடும்பங்களில்தான், பிள்ளைகள் கல்வியறிவின்றி வழிதவறிப் போகின்றனர். அம்மாதிரியான குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு முறைசாரா கல்வி பயிற்சிமுறையை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 60 குழந்தைகள், தங்களது 14 வது வயதில் அ, ஆ வை கற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கின்றனர். நாங்கள் குறிப்பிட்ட சில ஆசிரமங்களை தேர்வு செய்து, அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தருகிறோம் என்கிறார், பாதை அமைப்பின் நிறுவனர் முத்துக்குமார்.

"மேலும், நன்கொடையாளர்களை நேரடியாகவே உதவ சொல்லி விடுகின்றோம். ஏதாவது விசேஷம் நடக்கும் வீடுகளுக்கு சென்று உங்களால் முடிந்தால் அருகிலுள்ள ஏதாவது ஆசிரமத்திற்கு சென்று ஒருவேளை உணவு வழங்கலாமே என்று கேட்கும் போது அவர்களும் மனமுவந்து உதவுகின்றனர்" என்கிற முத்துக்குமாரின் வார்த்தைகளில், இந்த சமூகத்திற்கு எதையாவது செய்து விட வேண்டும் என்கிற ஆர்வம் தெறிக்கிறது.

கடந்த வருடத்தில் மட்டும், 25 மாணவர்களுக்கு படிப்பிற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 140 மாணவர்கள் தேர்வுப்பட்டியலில் உள்ளனர். இதுமட்டுமின்றி ரத்த நன்கொடையாளர்களின் பட்டியல், புத்தக வங்கி, கணினி மையங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இவ்வளவு தேவையையும் பூர்த்தி செய்யும் இவர்கள் யாரும், கைநிறைய சம்பாதிப்பவர்கள் அல்ல. பல சேவை உள்ளங்களின் கட்டமைப்புதான் பாதை. எல்லா மனிதருக்குள்ளும் உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றது. அதை சரியான நேரத்தில் தூண்டி விடும் போது, அவர்களும் இந்த சமூகத்தை நேசிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us