தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.ஐ.எப்.டி.யில் இரட்டை பட்டபடிப்பு

என்.ஐ.எப்.டி.யில் இரட்டை பட்டபடிப்பு

என்.ஐ.எப்.டி.யில் இரட்டை பட்டபடிப்பு


UPDATED : அக் 19, 2011 12:00 AM

ADDED : அக் 19, 2011 04:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2011 12:00 AM ADDED : அக் 19, 2011 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் என்.¨.எப்.டி., நியூயார்க்கில் உள்ள பேஷன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து இரட்டை பட்டப்படிப்பை வழங்க உள்ளது.

என்.ஐ.எப்.டி.யில் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. அவர்கள் படிக்கும் பட்டப்படிப்பிற்கு என்.ஐ.எப்.ஐ மற்றும் எப்.ஐ.டி.யின் சான்றிதழ்களைப் பெறலாம்.

என்.ஐ.எப்.டி. மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாக உள்ளது.

1986ம் ஆண்டு எப்.ஐ.டி.யின் ஒத்துழைப்பு மற்றும் யுனைட்டட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோகிராம் நிதியுதவியுடன்தான் என்.ஐ.எப்.டி. துவங்கியது. அதன் அடிப்படையில் எப்.ஐ.டி. உறுப்பினர்கள் டெல்லி வந்து என்.ஐ.எப்.டி.யுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த துறைகளில் இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். அதன் முடிவில், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன் ஆகியத் துறையில் இணைந்து பணியாற்றுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இத்துறையில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வியும், இரட்டைச் சான்றிதழ் பட்டப்படிப்பும் கிடைக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us