தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டில் 40 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை : அமைச்சர் தகவல்

நாட்டில் 40 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை : அமைச்சர் தகவல்

நாட்டில் 40 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை : அமைச்சர் தகவல்


UPDATED : அக் 20, 2011 12:00 AM

ADDED : அக் 20, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2011 12:00 AM ADDED : அக் 20, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்: "நாட்டில் 40 சதவீத அளவுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான காலி இடங்களை நிரப்புவது கடினமான வேலையாக உருவாகியுள்ளது" என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி தெரிவித்தார்.

ஐதராபாத்தில் நேற்று முன்தினம், "வருங்கால இளைஞர்களை சரியான பாதையில் வழி நடத்துவதில் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களில் பங்கு" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், முக்கிய விருந்தினராக அமைச்சர் புரந்தரேஸ்வரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கல்வியை தூய்மைப் படுத்துவதுடன், தேவையான வசதிகள் கிடைக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கு, மாநில அரசும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். கல்வி நிறுவனங்கள் தூய்மையுடன் செயல்பட்டால் தான், நாட்டின் நிதி வளம் பலம் வாய்ந்ததாக இருக்கும்.

நாட்டில் 40 சதவீத ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான காலி இடங்களை நிரப்புவது கடினமான வேலையாக உருவாகியுள்ளது. தற்போது படித்த இளைஞர்கள் அனைவரும், சாப்ட்வேர் இன்ஜினியர்களாகி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென ஆலோசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம்". இவ்வாறு புரந்தரேஸ்வரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us