தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.இ.இ.ஓ., கவுன்சிலிங் எப்போது?

ஏ.இ.இ.ஓ., கவுன்சிலிங் எப்போது?

ஏ.இ.இ.ஓ., கவுன்சிலிங் எப்போது?


UPDATED : அக் 25, 2011 12:00 AM

ADDED : அக் 25, 2011 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2011 12:00 AM ADDED : அக் 25, 2011 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு, கவுன்சிலிங்கை இன்னும் நடத்தாமல் இருப்பது, ஆசிரியர்களிடையே சலசலப்பை எழுப்பியுள்ளது.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தொடக்க கல்வித் துறை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அனைத்து வகையான, கவுன்சிலிங்கையும் இந்நேரம் முடித்திருக்க வேண்டும். ஆனால், ஏ.இ.இ.ஓ., பதவி உயர்வு கவுன்சிலிங் மட்டும் இதுவரை நடத்தாமல், உள்ளாட்சித் தேர்தல் காரணத்தைக் காட்டி, நிறுத்தி வைத்திருந்தனர்" என்றார்.

மேலும், "அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருப்பவர்களில், பணி சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். வெளிப்படையான முறையிலும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமலும் பதவி உயர்வு வழங்க, துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us