தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாறிவரும் மாணவர்களின் ரசனை

மாறிவரும் மாணவர்களின் ரசனை

மாறிவரும் மாணவர்களின் ரசனை


UPDATED : ஜன 25, 2012 12:00 AM

ADDED : ஜன 25, 2012 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2012 12:00 AM ADDED : ஜன 25, 2012 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாறிவரும் காலத்திற்கேற்ப, வெளிநாடு செல்லும் மாணவர்களது கல்வி விருப்பங்களும் மாறிவருகின்றன. வெளிநாட்டு கல்விக்கான அங்கீகாரமிக்க ஆலோசகர்களின் அமைப்புதான் இதை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் வழக்கமாக விரும்பும் கணிப்பொறி அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளைத் தவிர்த்து, நுண்கலை, அறிவியல், சுகாதாரம், விருந்தோம்பல், வங்கி மற்றும் நிதித்துறை, கட்டடக்கலை, பேஷன் டிசைனிங் அண்ட் பைலட் டிரெய்னிங் போன்ற பலவிதமான படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம் திரும்பியுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த அமைப்பானது, ஜனவரி 31ம் தேதி, கோவையில் தனது 9வது சர்வதேச கல்விக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 20 பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு, வெளிநாட்டு பல்கலைகளில், முதலில் சேர்க்கைப் பெறும் முதல் 10 மாணவர்களுக்கு தலா 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களில் சுமார் 50% பேர், ஏறக்குறைய 4000 பல்கலைகளைக் கொண்ட அமெரிக்காவையே தேர்வு செய்கின்றனர் என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

மேலதிக தகவல்களுக்கு Association of Accredited Advisors on Overseas Education - AAAOE என்பதன் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us