தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ்2 செய்முறைத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் தள்ளிவைப்பு

பிளஸ்2 செய்முறைத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் தள்ளிவைப்பு

பிளஸ்2 செய்முறைத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் தள்ளிவைப்பு


UPDATED : ஜன 25, 2012 12:00 AM

ADDED : ஜன 25, 2012 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2012 12:00 AM ADDED : ஜன 25, 2012 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தப் புதிய உத்தரவின்படி, பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி, அதேமாதம் 25ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாவட்ட மாணவர்கள் பிப்ரவரி 2 முதல் 20ம் தேதி வரை செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தானே புயலால் கடலூர் மாவட்டம் கடுமையாக தாக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரணப் பணிகள் மிக மெதுவாக மேற்கொள்ளப்பட்டதால், அரையாண்டு தேர்வு விடுமுறைகூட அம்மாவட்டத்திற்கு நீட்டிக்கப்பட்டது. பல பள்ளிகளின் மின்இணைப்புகளும் பாழானது. இதுபோன்ற காரணங்களால், பிளஸ்2 செய்முறைத் தேர்வை அம்மாவட்டத்திற்கு மட்டும் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, இதற்கான உத்தரவு வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டு சுமார் 9.63 லட்சம் மாணவர்கள் பிளஸ்2 பொதுத் தேர்வை எழுதுகையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26,000 பேர் அத்தேர்வை எழுதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us