UPDATED : ஏப் 03, 2013 12:00 AM
ADDED : ஏப் 03, 2013 05:18 PM
அ நிறம் | அளவு
ஆசிரியர்கள்
சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான
கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது எம்.பில்., எம்.டெக்., பிஎச்.டி., போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.அங்கீகாரம்
தேர்ந்தெடுக்கும் கல்லூரி
, மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.உள்கட்டமைப்பு வசதிகள்
தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி
, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.கல்லூரியின் பிரபலம்
புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது
, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும்.வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா
? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.பாடத்திட்டங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டிலும்
, பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள் தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.இதற்கு கல்லூரியின் இணையதளம்
, முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.