தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் மோதல்

பள்ளி மாணவர்கள் மோதல்

பள்ளி மாணவர்கள் மோதல்


UPDATED : ஏப் 04, 2013 12:00 AM

ADDED : ஏப் 04, 2013 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2013 12:00 AM ADDED : ஏப் 04, 2013 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவாரம்: தேவராத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவரை தாக்கிய, பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தேவாரத்தை சேர்ந்த 14 வயது மாணவர், இங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த, அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வரும் மாணவர் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மோதிலால் மைதானம் அருகே நடந்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவரை, பத்தாம் வகுப்பு மாணவர் வழிமறித்து தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த பத்தாம் வகுப்பு மாணவர், அவருடன் படிக்கும் வகுப்பு நண்பர் ஒருவர்,மேலும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவரை தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். டி.எஸ்.பி.,அருள் அமரன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள்,போடி மாஜிஸ்திரேட் அம்பிகா முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us