UPDATED : ஏப் 17, 2013 12:00 AM
ADDED : ஏப் 17, 2013 10:55 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்., 23, 24ல் புத்தக திருவிழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மைய நூலகம் சார்பில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு "என்னை செதுக்கிய புத்தகம்" என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள், தங்களது பள்ளி முதல்வரை, தலைமை ஆசிரியரை அணுகி போட்டியில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு 1,000 ரூபாய், இரண்டாம் பரிசு 500 ரூபாய், மூன்றாம் பரிசு 250 ரூபாய் வழங்கப்படும்.
