தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று குழந்தைகள் தினம்

இன்று குழந்தைகள் தினம்

இன்று குழந்தைகள் தினம்


UPDATED : நவ 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட போது, “குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்” என்றார்.
குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். அவரது காலத்தில் அன்பு வைத்திருந்த குழந்தைகள் - இன்று பெரியவர்களாகி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடும் முக்கிய நிலையில் உள்ளனர். இவர்களது குழந்தைகளும், நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை அறிந்து அவர் மீது பாசம் கொள்கின்றனர். நேரு மறைந்துவிட்ட போதும், காலம் காலமாக அவரது அன்பு குழந்தைகள் மத்தியில் என்றும் நிலைத்து நிற்கிறது.
குழந்தைகளுக்கு கடிதம் எழுதிய நேரு அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
வயதானவர்கள் எப்போதும் இளையோரிடம் அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறேன். சிறுவனாக இருந்த போது, நான் அதை விரும்பவும் இல்லை. எனவே நீங்களும் அறிவுரைகளை விரும்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். வளர வளர நாம் புத்திசாலியாக ஆகிறோம். ஆனால் ஒரு சிலரே, நல்ல ஞானம் பெற்றவர்களாக உருவாகிறார்கள். என்னுடைய மனதில், நான் புத்திசாலியா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை.
நல்ல புத்திசாலியானவர்கள் தாங்கள் புத்திசாலி என்று பேசமாட்டார்கள். தாங்கள் பெரியவர்கள் என்று வெளிக்காட்டும் விதத்திலும் நடந்து கொள்ள மாட்டார்கள். நம்முடன் காந்தியடிகள் இருந்தார்கள். அவரை பாபுஜி என்று செல்லமாக அழைப்போம். அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்த போதும், அதை ஒரு போதும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். இவ்வாறு அவர் பாசத்துடன் குழந்தைகளுக்கு எழுதியிருந்தார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஜூன் முதல் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ம் ஆண்டில், நவம்பர் 20ம் தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா., அறிவித்தது. எனினும் நவம்பர் 14ம் தேதிதான், இந்தியாவில் குழந்தைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us