விழுப்புரத்தில் 2 ஆயிரம் பேர் போலீஸ் பணிக்கு தேர்வு
விழுப்புரத்தில் 2 ஆயிரம் பேர் போலீஸ் பணிக்கு தேர்வு
UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விழுப்புரம்: விழுப்புரம் சரகத்தில் 2,000 புதிய இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு காகுப்பம் போலீஸ் மைதானத்தில் நடந்தது. கடந்த 7ம் தேதி துவங்கிய தேர்வில் 2978 ஆண், 341 பெண் கலந்து கொண்டனர். முதலில் எழுத்து தேர்வு நடந்து அதில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து, உயரம், மார்பளவு அளவிட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
நவ. 11ம் தேதி முதல் தினமும் கயிறு ஏற்றம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள் நடந்தது. நவ. 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி., ராஜேந்திரன், டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அமல்ராஜ் தினமும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதி கட்ட தேர்வில் 1773 ஆண், 227 பெண்கள் இரண்டாம் நிலை புதிய போலீசாராக விழுப்புரம் சரகத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
