தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைகிறது விமானிகளின் ஊதியம்

குறைகிறது விமானிகளின் ஊதியம்

குறைகிறது விமானிகளின் ஊதியம்


UPDATED : நவ 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபகாலம் வரை விமானிகள் மிக அதிக சம்பளங்களைப் பெற்று வந்துள்ளர்கள். ஆனால் தற்போது தனியார் விமானத்துறைகளில் நிலவும் கடுமையான பொருளாதாரப் பிரச்னைகளின் காரணமாக அவர்களின் சம்பளங்களில் கடும் வெட்டு இருக்கும் என்று தெரிகிறது.
தற்சமயம் இந்தியாவில் பணிபுரியும் பயிற்சி பெற்ற பைலட் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் (3 மில்லியன்) வரை சம்பளம் பெற்று வந்துள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பைலட்டுகளின் சம்பளத்தை 20 சதவீதம் குறைக்க இருப்பதாக இத்துறை தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கிங்-பிஷர் நிறுவனம் பயிற்சியில் உள்ள சக-பைலட்டுகளின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு முதுநிலை பைலட்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு நிறுவனம் இக்கட்டுகளில் உள்ளபோது இதுபோன்ற சம்பள வெட்டுக்கள் தவிர்க்கமுடியாது என்று இந்திய பைலட்டுகள் உணர்ந்துள்ளார்கள்.
இருந்தாலும் இந்நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டைச் சார்ந்த பைலட்டுகளே மிக அதிக சம்பளம் பெறுவதால் அவர்களின் கான்ட்ராக்ட்களை நீக்குவது இதைவிட நல்ல வழியாக இருக்கும் என்று இந்நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய பைலட்டுகள் கூறுகிறார்கள். வெளிநாட்டு பைலட்டுகளைப் பணியிலமர்த்தும் விஷயம் லோக்சபாவிலேயே விவாதிக்கப்படும் அளவுக்கு சர்ச்சைக்குரியதாக இருந்துவந்துள்ளது.
இதுவரை 134 வெளிநாட்டுப் பைலட்டுகள் ஒப்பந்த அடிப்படையில் விமான நிறுவனங்களில் பணி புரிவதாகவும் வெகுவிரைவிலேயே அவர்களின் பணிக்காலம் நிறைவுபெறும் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us