தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்ய ஐவர் குழு!

சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்ய ஐவர் குழு!

சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்ய ஐவர் குழு!


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்தியன் ஆகிய கல்வி முறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்வி முறையிலும் மதிப்பெண், பாடத் திட்டங்கள் வேறுபடுகின்றன. கட்டண விகிதமும் மாறுபடுகிறது. படிக்கும் போது மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.
பள்ளிக் கல்விக்குப் பின் உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் போது இதனால், பல்வேறு குழப்பங்கள் நேர்கின்றன. கல்வி முறையில் உள்ள இந்த வேறுபாடுகளை களைய, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்கென அமைக்கப்பட்ட முத்துக்குமரன் கமிட்டி, சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிலைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மாநில திட்ட இயக்குனர் விஜயகுமார் தலைமையில் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு தங்கள் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மாநில திட்ட இயக்குனர் விஜயகுமார், ஒரு நபர் குழுவாக நியமிக்கப்பட்டார்.
அவர் அளித்த பரிந்துரைகளை அரசு நன்கு ஆராய்ந்தது. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன், பிற மாநிலங்களில் சமச்சீர் கல்வி முறை எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து, அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கையை தொடரலாம் என அரசு கருதுகிறது.
இப்பணிக்காக ஒரு நபர் குழுவின் தலைவர் விஜயகுமார் தன்னுடன் வேறு சில கல்வியாளர்களை இணைத்துக் கொள்ளலாம். இக்கல்வியாளர் குழுவினர், தங்கள் அறிக்கையை ஆறு மாதத்துக்குள் அரசுக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான உரிய மேல் நடவடிக்கைகளை உடனடியாக பள்ளிக் கல்வி இயக்குனர் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மாநில திட்ட இயக்குனர் விஜயகுமாரின் தலைமையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட குழுவில், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெகந்நாதன், கல்லூரி கல்வி இயக்குனர் நளினி ரவீந்திரன், சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சூசைராஜ் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழிற்கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us