UPDATED : ஜன 01, 2015 12:00 AM
ADDED : ஜன 01, 2015 01:18 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்ட யுவகேந்திராவும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் படச்சங்கம் இணைந்து நாளை (ஜன.,2) முதல், குழந்தைகளுக்கான படத்தொகுப்பு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் திரையிடப்பட உள்ளது.
தேசிய ஒருமைப்பாடு கலை, கலாசாரம், பண்பாடு, சுதந்திர போராட்டம், தேசிய தலைவர்கள் பற்றி விளக்கி கூறும் படங்கள் இலவசமாக திரையிடப்பட உள்ளன.மாணவ, மாணவிகள் பங்கு பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
