தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் நூலக கட்டடம்

மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் நூலக கட்டடம்

மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் நூலக கட்டடம்


UPDATED : ஜன 01, 2015 12:00 AM

ADDED : ஜன 01, 2015 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2015 12:00 AM ADDED : ஜன 01, 2015 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள நூலக கட்டடத்தின் மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு, பெயர்ந்து விழுகின்றன. மேலும் சில இடங்களில் பூச்சு பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.

வேட்டைகாரன்புதூரிலுள்ள கிளை நூலகம், 50 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. நாள்தோறும், காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும் நூலகம் செயல்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பெண்கள் உட்பட தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நூலகத்துக்கு 1991ம் ஆண்டு சுமார் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டட மேற்கூரையின் சில இடங்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.மழைநீர் சொட்டு சொட்டாக கசிந்து, புத்தகங்கள் மீது விழுகின்றன. விலை மதிக்க முடியாத புத்தகங்கள் வீணாகின்றன. சுத்தம் செய்யப்படாமலும் பராமரிக்கப்படாமலும் நூலகம் உள்ளது. மேற்கூரை மிகவும் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. அடிக்கடி மேற்கூரை பூச்சுகள் இடிந்து விழுவதால், வாசகர்கள் புத்தகங்களை வெளியில் கொண்டு சென்று படிக்கின்றனர்.

வாசகர்கள் சிலர் கூறுகையில், ’இந்த நூலகத்தில் தேவையான புத்தகங்கள், தினசரி, மாத இதழ்கள் இருந்தும், பாதுகாப்பாக அமர்ந்து படிக்க முடியவில்லை. மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் நொறுங்கி விழுகின்றன. இதற்கு பயந்து, புத்தகங்களை வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையிலுள்ள, நூலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

வேட்டைக்காரன்புதூர் கிளை நூலகர் தாமோதரனிடம் கேட்டபோது, ”நூலக கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என, மாவட்ட நூலக அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு செய்தார். ’பராமரிக்க வேண்டியது அவசியம்’ என குறிப்பு எழுதியுள்ளார். இருந்தும் இதுவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது ஏன் என தெரியவில்லை,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us