UPDATED : அக் 15, 2015 12:00 AM
ADDED : அக் 15, 2015 11:04 AM
சென்னை
:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, அருள்மொழி நேற்று பதவி ஏற்றார். அரசு இ-சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என,
முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அவர் அளித்த
பேட்டி:
போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ-சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
நிரந்தர பதிவு, தேர்வு விண்ணப்பம், அதில் மாற்றம், நகல் பெறுதல் போன்ற சேவைகளுக்கு, அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும், இ-சேவை மையங்களை அணுகலாம்; அதற்கு, கட்டணம் உண்டு. இந்த சேவைகள், எல்காட் நடத்தும், இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
