UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 10:51 AM
ஊட்டி
:
கோத்தகிரியில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப் பட உள்ளது.
கோத்தகிரி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுய வேலை வாய்ப்பு மைய இயக்குனர் வசந்தகுமார் அறிக்கை:
கோத்தகிரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கான சுய வேலை வாய்ப்புப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில், இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி, நாளை துவங்கி, வரும், 21ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதில், 18-40 வயதுக்குள் இருப்பவர்களும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண்கள் பயிற்சி பெறலாம்.
பயிற்சி பெறுவோருக்கு தேநீர், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின் சான்றிதழ்
வழங்கப்படும். மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர் 04266-273051 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, வசந்தகுமார் கூறியுள்ளார்.
