UPDATED : ஏப் 22, 2016 12:00 AM
ADDED : ஏப் 22, 2016 10:36 AM
அ நிறம் | அளவு
வால்பாறை
:
வால்பாறை அடுத்துள்ளது வெள்ளமலை எஸ்டேட் மட்டம். இங்குள்ள அரசு நிதியுதவி பெறும்
துவக்கப்பள்ளியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, செக்சன்ஆபீசர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது.
விழாவுக்கு உதவி
செக்சன் ஆபீசர் லட்சுமணன், நகராட்சி கவுன்சிலர் பூங்கொடி ஆகியோர்
முன்னிலை வகித்தனர், பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார்
வரவேற்றார்.
விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் ழங்கப்பட்டன. உதவி ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.
