UPDATED : ஏப் 25, 2016 12:00 AM
ADDED : ஏப் 25, 2016 10:42 AM
அவிநாசி
: வேத
ஆகம பாட சாலை மாணவர்களுக்கு, மஹோத்சவ பயிற்சி தேர்வு, அவிநாசியில் நடைபெற்றது.
பெங்களூரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின், வாழும் கலை ஆசிரம வளாகத்தில், வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை செயல்படுகிறது. இங்கு வேதம் பயிலும் மாணவர்களுக்கு, அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர்த்திருவிழாவில், மஹோத்சவ பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான தேர்வு, சின்னைய கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றன.
கூனம்பட்டி ஆதீன திருமடத்தை சேர்ந்த நடராஜ சுவாமி, தேர்வு அதிகாரியாக பணியாற்றினார். எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வுகள் நடைபெற்றன. வேத ஆகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் கூறுகையில், கோவில்களில் திருவிழாக்களை எவ்வாறு நடத்த வேண்டும், ஆகம விதி என்ன சொல்கிறது, கொடியேற்றம், இறக்கத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பூஜை முறை குறித்து, தேர்வு நடத்தப்பட்டது, என்றார்.
