UPDATED : ஏப் 25, 2016 12:00 AM
ADDED : ஏப் 25, 2016 10:43 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
முருங்கம்பாக்கம் பேட் அரசு துவக்கப் பள்ளியில் 2016-17 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை பள்ளி
தலைமையாசிரியை ரவகாந்தம் துவக்கி வைத்தார். பேரணியில் ஆசிரியர்கள் பாரதி, பாலமுருகன், மாலதி, ஜீவானந்தம், எழிலரசி ஆகியோர் தலைமையில் பள்ளி
மாணவர்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தினர்.
பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பேரணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
