UPDATED : ஏப் 25, 2016 12:00 AM
ADDED : ஏப் 25, 2016 10:45 AM
மதுரை
: மதுரையில்
தினமலர் மற்றும் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி இணைந்து நடத்தும் இரண்டு
நாள் மாணவ இயக்குனர் குறும்பட தயாரிப்புப் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கல்லுாரி முதல்வர் ராம்நாத் வரவேற்றார். திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் பேசியதாவது: திரைப்படத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதால், மாணவர்கள் இத்துறை சார்ந்த படிப்புகளை படிக்க முன்வர வேண்டும். திறமையுடன், உண்மையாக உழைத்தால் சாதிக்க முடியும்.
இக்கல்லுாரியில் திரைப்படம், தொலைக்காட்சி படிப்பிற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. மாணவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து படித்துப் பயன்பெற வேண்டும், என்றார்.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு துறைப் பேராசிரியர் மணிகண்டன், பேராசிரியர் ரகுகாளிதாஸ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இன்று (ஏப்., 25) நடக்கும் முகாமிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.தொடர்புக்கு: 95007 84760.
