தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு யோகா கட்டாயமாக்கப்படும்

மாணவர்களுக்கு யோகா கட்டாயமாக்கப்படும்

மாணவர்களுக்கு யோகா கட்டாயமாக்கப்படும்


UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM

ADDED : ஜூன் 15, 2016 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM ADDED : ஜூன் 15, 2016 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: புதுச்சேரியில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி
, யோகா கட்டாயமாக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

சட்டசபை வளாகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வுகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

லாஸ்பேட்டை வள்ளலார் பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளிகளில் ஆய்வு நடத்தினோம். அங்குள்ள கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினோம்.கடந்த காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முதல் நாளே தங்களை தயார்படுத்திக் கொண்டு வருவர். அதுபோன்று கற்பிக்கும் முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம்.

இந்த ஆண்டு பள்ளி துவங்கியதும் அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. ௧௧ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் ௨௩ம் தேதி தான் புத்தகம் கொடுக்க உள்ளனர். எனவே ௨௫ம் தேதிக்குள் புத்தகம் வழங்கப்படும்.

ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் நல்ல கல்வி கிடைக்கும். பள்ளிகள் தோறும் விளையாட்டு திடல் அமைக்க முடியாவிட்டாலும், விளையாட்டை ஊக்குவிக்க ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு விளையாட்டு திடல் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வித் தரம் உயர்த்த பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் கருத்து கேட்கப்படும்.

சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். அதற்காக ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா கட்டாயமாக்கப்படும். புதுச்சேரி முழுவதும் உள்ள பள்ளிகளில் இனி அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us