UPDATED : ஜூலை 27, 2009 12:00 AM
ADDED : ஜூலை 27, 2009 12:46 PM
அ நிறம் | அளவு
தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசிஷியன்ஸ் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, அரசு மருத்துவ லேப் டெக்னீஷியன் சங்கத்தின் பொதுச் செயலர் சுகுமார் கூறியதாவது: கடந்த 21 ஆண்டுகளாக, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மருத்துவ லேப் டெக்னீஷியன் களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, பணிச் சுமையை கணக்கில் கொண்டு, நிரப்பப்படாமல் உள்ள லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு கிடைக்காவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு சுகுமார் கூறினார்.
