மதுரையில் சிபெட் மையம்: மத்திய அமைச்சர் அழகிரி தகவல்
மதுரையில் சிபெட் மையம்: மத்திய அமைச்சர் அழகிரி தகவல்
UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 01:56 PM
அ நிறம் | அளவு
முன்னாள் போலீஸ் அமைச்சர் பி. கக்கன் பிறந்த ஊரான தும்பைபட்டியில் நடைபெற்ற கக்கன் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அழகிரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த புதிய சிபெட் மையத்தின் மூலம் இந்தப் பகுதியில் பிளாஸ்டிக் தொழில் மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இடையப்பட்டியில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பார்மாசூட்டிக்கல் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் (என்.ஐ.பி.ஆர்.,) மையத்தை ஏற்படுத்தபடும் என்றார் அவர்.
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டிலிருந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், மேலூர் அருகே பெல் நிறுவனத்தின் ஒரு பிரிவைக் கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் அழகிரி குறிப்பிட்டார்.
