கொச்சியில் திறந்த நிலைப் படிப்புக்கான காமன்வெல்த் மாநாடு
கொச்சியில் திறந்த நிலைப் படிப்புக்கான காமன்வெல்த் மாநாடு
UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 02:04 PM
அ நிறம் | அளவு
இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த மாநாடு அடுத்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும்.
காமன்வெல்த் ஆப் லேர்னிங் அமைப்பின் தலைவர் சர் ஜான் டேனியல் இத்தகவலை சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார். கற்பதற்கான வாய்ப்பும் வெற்றியும் - உலக மேம்பாட்டுப் பார்வையில் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
உலகிலேயே மிகப் பெரிய திறந்த நிலைப் பல்கலைக்கழகமான இக்னோவின் தொலைதூரக்கல்வி அனுபவங்கள் மற்ற நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் டேனியல் குறிப்பிட்டார்.
