தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரைவில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

விரைவில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

விரைவில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு


UPDATED : அக் 27, 2009 12:00 AM

ADDED : அக் 27, 2009 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2009 12:00 AM ADDED : அக் 27, 2009 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவம்பரில், 1,200 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் காசி விஸ்வநாதன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், மாநில அரசுப் பணிக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப்2 தேர்வு மூலம் சார்நிலை கருவூலர், நகராட்சி கமிஷனர், கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
 
நவம்பரில், 1,200 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், வனத்துறையில் 70 வனச்சரகர் பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பும் நவம்பரில் வெளியிடப்படும். டிசம்பரில் துணை கலெக்டர், தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்யும் குரூப்1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
 
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, அரசுப் பணி தேர்வுக்கான கல்வித் தகுதி, தேர்வுக்கு தயாராவது ஆகியவை குறித்து மாணவர்களிடம் பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முற்றிலும் திறமையின் அடிப்படையிலேயே பணி கிடைக்கிறது.
 
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு மூலம் வேலை பெறலாம் என்பது தவறான கருத்து. மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வில், பொதுப்பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என, சில பிரிவுகளின் கீழ் மட்டுமே பணி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், விதவைகள், ஊனமுற்றோர், அருந்ததியர் என, ஏராளமான உட்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு மூலம் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம் சற்றே பெரிதாக உள்ளது. இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us