தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழறிஞர்களின் உதவியாளருக்கு சலுகை

தமிழறிஞர்களின் உதவியாளருக்கு சலுகை

தமிழறிஞர்களின் உதவியாளருக்கு சலுகை


UPDATED : டிச 06, 2020 12:00 AM

ADDED : டிச 06, 2020 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2020 12:00 AM ADDED : டிச 06, 2020 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் உதவியாளர்களுக்கும், அரசு பஸ்களில் இலவச பயண அட்டை வழங்கப்பட உள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள்; தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டிற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்; எல்லை காவலர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு, அரசு பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.
ஆனாலும், 60 வயதுக்கு மேற்பட்டோரால், தனியாக பயணிக்க முடியாத நிலையில், அவர்களின் உதவியாளர்களுக்கும், இலவச பயணம் அனுமதிக்கப்படும் என, தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்தது. அதன்பின், அரசாணையும் வெளியிடப்பட்டது.
தற்போது, 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுடன் பயணிக்கும் உதவியாளரின் விபரங்களை, அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, இலவச பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us