தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.பி.எஸ்.சி., மறுதேர்வு வழக்கு

யு.பி.எஸ்.சி., மறுதேர்வு வழக்கு

யு.பி.எஸ்.சி., மறுதேர்வு வழக்கு


UPDATED : ஜன 30, 2021 12:00 AM

ADDED : ஜன 30, 2021 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2021 12:00 AM ADDED : ஜன 30, 2021 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபரில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் புயல் மழை காரணமாக தேர்வை பலர் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் வயது வரம்பின் அடிப்படையில் கடைசி முறையாக தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களும் தேர்வை தவறவிட்டனர்.
இவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் &'கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைசியாக தேர்வு எழுத வேண்டிய வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்&' என கோரப்பட்டது.இந்த மனு மீது மத்திய அரசு அளித்த பதிலில் &'தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு அளிப்பது தேர்வு எழுதிய மற்றவர்களுக்கு அநீதி இழைப்பதை போன்றதாகும்&' என தெரிவித்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் பி.ஆர்.கவாய் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வயது வரம்பின் அடிப்படையில் தங்களுக்கு இருந்த கடைசி வாய்ப்பை கடந்த ஆண்டு நழுவவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது.
யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த துவங்கியதில் இருந்து இதுவரை எத்தனை முறை மறு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி வழங்கப்பட்டு இருந்தால் இந்த முறையும் ஏன் வழங்கக் கூடாது. ஒருவேளை வழங்கினால் எத்தனை பேர் தேர்வு எழுத வேண்டி உள்ளது. இந்த கேள்விகளுக்கு நாளை மறுதினம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us