UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM
ADDED : ஜூன் 26, 2021 06:59 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
வானுார் அருகே சகோதரியின் காரிய நிகழ்ச்சிக்கு சென்ற, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சிறுவனின் வேண்டுகோளை ஏற்று, &'ஆட்டோகிராப்&' போட்டுக் கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் வட்டம் பேராவூர் கிராமத்தில் வசித்து வந்த, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் மூத்த சகோதரி மனோன்மணி, கடந்த 11ம் தேதி மாரடைப்பால் இறந்தார். அவரது காரியத்திற்கு, முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் பேராவூர் சென்றிருந்தார்.
அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த சிறுவன், முதல்வர் ரங்கசாமியிடம் &'ஆட்டோகிராப்&' கேட்டு, வேண்டுகோள் விடுத்தார். அந்த சிறுவனுக்கு, &'நல்வாழ்த்துக்கள், படி, படி, படி. முன்னேறலாம்&' என எழுதி, முதல்வர் ரங்கசாமி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.
