தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பாடப்புத்தகம் கிடைக்கவில்லை

இலவச பாடப்புத்தகம் கிடைக்கவில்லை

இலவச பாடப்புத்தகம் கிடைக்கவில்லை


UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM

ADDED : ஜூன் 25, 2023 03:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM ADDED : ஜூன் 25, 2023 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் உதவிபெறும்பள்ளி மாணவர்கள் பலருக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. மாவட்டத்தில் பெரும்பாலான உதவிபெறும் பள்ளிகள் ஆங்கில வழி பிரிவில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து வைத்துள்ளதால் அதற்கேற்ற எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். ஒரு பள்ளியில் ஒரு ஆங்கிலப்பிரிவிற்கு (40 மாணவர்கள்) மட்டுமே ஆங்கில வழிப் பாடப் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கையை குறைத்துவிட்டு, ஆங்கில வழியில்அதிக எண்ணிக்கையில் சேர்த்து புத்தகங்கள் கேட்கின்றன. ஒரு பிரிவிற்கு மேல் ஆங்கில வழியில் துவக்கினால் அவை சுயநிதி பிரிவாக தான் கருதப்படும். அப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க வாய்ப்பில்லை. இதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us