தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM

ADDED : ஜூலை 04, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM ADDED : ஜூலை 04, 2023 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சகாய தமிழ்செல்வி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் அம்பிராஜ் முன்னிலை வகித்தனர். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும், என வலியுறுத்தி கோஷமிட்டனர். முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் திருக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜோமில்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பானுமதி, பொருளாளர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தனர். கமுதி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மூக்கூரான் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சாவித்திரி, மாவட்ட செயலாளர் கணேசன் உட்பட பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us