UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 04:37 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
காமன்வெல்த் பளு துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.டில்லியில், சமீபத்தில் காமன்வெல்த் பளுதுாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் புதுச்சேரி வீராங்கனை ஹர்ஷிகா, இந்தியா சார்பில் சப் - ஜூனியர் 64 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 68 மற்றும் 87 கிலோ என மொத்தம் 155 கிலோ துாக்கி சாதனை புரிந்துள்ளார். இவர் புதுச்சேரி குளூனி பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தங்கம் வென்று சாதனை புரிந்த வீராங்கனைக்கு பளு துாக்கும் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
