UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 05:40 PM
திருவள்ளூர்:
பசுமை வளத்தை மேம்படுத்த பள்ளிகளுக்கு இலவச செடிகளை வழங்குகிறார் விவசாயி ஜெயந்தி.நிழல் தரும் செடிகள் வழங்குவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கூவம் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.ஜெயந்தி கூறியதாவது:
எங்களுக்கு நிலத்தில், கொய்யா, அத்தி, உள்ளிட்ட பல்வேறு பழ செடிகளை உற்பத்தி செய்து வருகிறேன். இதுதவிர, மகோகனி, செம்மரம், குமிழ் தேக்கு மற்றும் நிழல் தரும் செடிகள், பூ செடிகள் ஆகியவை உற்பத்தி செய்து வருகிறேன். ஆகஸ்ட் -15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சுவர் வசதி இருக்கும் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, இலவசமாக செடிகளை வழங்க உள்ளேன். தொடர்புக்கு: கே. ஜெயந்தி, 94425 18127.செடிகள் தேவைப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம். இதன் வாயிலாக, விவசாயத்திற்கு இணையாக, பள்ளி வளாகங்களிலும் பசுமை வளத்தை மேம்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
