UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 05:00 AM
பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களது சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஆக., 9ல் சர்வதேச பழங்குடியினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 6 சதவீதமாக உள்ளனர். 4000 மேலான மொழிகளை பேசுகின்றனர். 2016 ஐ.நா., கணக்கின படி 2680 பழங்குடியின மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளன. வேலை பார்க்கும் பழங்குடியின மக்களில் 47% பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். பாரம்பரிய அறிவை பாதுகாத்தல், பரப்புவதில் பழங்குடியினரின் பங்கு என்பது இந்தாண்டு மையக்கருத்து.தமிழகத்தில், 36 பட்டியல் பழங்குடியின வகுப்பை சார்ந்த, 7.5 லட்சம் பேர் வாழ்கின்றனர். பழங்குடியினர் வாழ்விடத்தில் தான் உலகின், 80 சதவீதம் உயிர்ச்சூழல் பன்மயம் கொண்டதாக உள்ளது.காடுகளை, இயற்கை வளங்களையும் பாதுகாக்க பழங்குடி பெண்களின் தீரமிக்க செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. வனத்தை காக்க உயிர்களை தியாகம் செய்த பழங்குடி பெண்களின் வரலாறு உலகெங்கிலும் உண்டு. எனவே தான், சூழலியலை பாதுகாக்க நாம் பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டும்.அவர்கள், தங்களது பாரம்பரிய அறிவை, இயற்கையிடம் இருந்தும், தங்களின் முன்னோர்களிடம் இருந்து பெறுகின்றனர்.
