UPDATED : ஆக 11, 2023 12:00 AM
ADDED : ஆக 11, 2023 09:44 AM
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அதிநவீன இயந்திரங்களுடன் நிட்ஷோ கண்காட்சி இன்று துவங்குகிறது.திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி துறை வளர்ச்சியில், புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் மெஷின்கள் பங்களிப்பு அத்தியாவசியமானது. நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த தொழிலாளரை கொண்டு அதிகபட்ச உற்பத்தி செய்ய ஏதுவாக, புதிய தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது. உற்பத்தி செலவை குறைக்கும் எதிர்பார்ப்புடன், சர்வதேச அளவில் அதிநவீன மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதன்படி, திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் ஒட்டுமொத்த தேவைகளையும், ஒரே இடத்தில் நிறைவேற்றும் வகையில், நிட்ேஷா கண்காட்சி நடத்தப்படுகிறது.திருப்பூர் - காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவு அடுத்துள்ள, டாப் லைட் வளாகத்தில், 21வது நிட்ஷோ கண்காட்சி, நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. நவீன இயந்திரங்களைக் காட்சிப்படுத்த, வெளிநாட்டு நிறு வனங்கள் தயாராக உள்ளன. கண்காட்சி வளாகம், ஆறு அரங்குகளுடன், 420 ஸ்டால்களுடன் நடக்க உள்ளது. ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளைச்சேர்ந்த நிறுவனங்கள், அதிநவீன தொழில்நுட்ப நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் உட்பட பின்னலாடை துறை சார்ந்த அனைத்துவகை இயந்திரங்களும் இடம்பெறுகின்றன.அனைத்து இயந்திரங்களையும், இயக்கி பார்த்து புதிய அம்சங்களை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் முதன்முறையாக, ஆடையை அயர்ன் செய்து, தானியங்கி முறையில் பேக்கிங் செய்யும் இயந்திரங்கள், இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளது. நிட்டிங், போர்ச்சுக்கல் நாட்டு நிறுவனம், மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் நவீன டிஜிட்டல் பிரின்டிங் இயந்திரம் இடம்பெறும். சர்வதேச அளவில் மிகப்பெரிய, இட்மா ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி, ஜூன் மாதம் இத்தாலியில் நடந்தது. அக்கண்காட்சியில் இடம்பெற்ற இயந்திரங்கள், திருப்பூர் நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறும். விசைத்தறி தொழில்நுட்ப இயந்திரங்களும் இடம்பெறுவதாக, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.தொழில்துறை புத்துணர்வு
கண்காட்சி கைகொடுக்கும்
வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்யும் போது, சில வகை சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்காக, தொழில் அமைப்புகளை அணுகலாம். திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஓராண்டாக, கடும் சவால்களை சந்தித்து, போராடி வருகிறது. வழக்கமான ஆர்டர் பெறுவதில் இடர்பாடு குறையவில்லை. உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும் பாதிப்புகளை கடந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், புதிய தொழில்நுட்ப இயந்திர கண்காட்சி நடத்துவது, நிச்சயமாக பயனளிப்பதாக மாறும் என்று, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
