UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 03:52 PM
அ நிறம் | அளவு
சென்னை:
கி.பி., 1639ல் சென்னை நகரம் தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் ஆக., 22ம் தேதியன்று, ஒவ்வொரு ஆண்டும், சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையின் அழகை பிரதிபலிக்கும் வகையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள், அக்கம் பக்கம் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். சிறந்த புகைப்படங்களை எடுத்த மாணவர்களை முதல்வர் பாராட்டினார்.
