UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 03:51 PM
கோவை:
கோவை மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதால், 20 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன.தமிழகம் முழுக்க காலியாக இருந்த, 742 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு, சமீபத்தில் நடந்த கலந்தாய்வில், 697 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். இதில், 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவை மாவட்டத்தில், 20 தலைமையாசிரியர் பணியிடங்களும், முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்ததால், காலியிடங்கள் இல்லை.பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கு, பாடம் நடத்துவதால்,முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கு, விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. இதில் தாமதம் நீடித்தால்,முக்கிய பாடங்களுக்கு வகுப்பு எடுப்பது, சிலபஸ் முடிப்பது சிரமமாகி விடும். முதல் பருவத்தேர்வுகள் முடிந்த நிலையில், இக்காலியிடங்கள் உள்ள பள்ளிகளுக்கு, மாற்று ஆசிரியர்களையாவது நியமிக்க வேண்டுமென, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
