UPDATED : ஆக 25, 2023 12:00 AM
ADDED : ஆக 25, 2023 05:53 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
இஸ்ரோவுக்கு தலாய்லாமா பாராட்டு தெரிவித்துள்ளார். சந்திரயான் - 3 விண்கலம். நிலவில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிகழ்விற்கு பல்வேறு தரப்பிலும், உலக விஞ்ஞானிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில் திபெத் மதத்தலைவர் தலாய்லாமா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதிர்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையில் சேவை ஆற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
