தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.சி.இ.ஆர்.டி.,க்கு பல்கலை அந்தஸ்து

என்.சி.இ.ஆர்.டி.,க்கு பல்கலை அந்தஸ்து

என்.சி.இ.ஆர்.டி.,க்கு பல்கலை அந்தஸ்து


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், உள்ளூர் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, அதன் கல்வி நிறுவனங்கள் வாயிலாக ஆசிரியர் பயிற்சிக்கான இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, பல்கலைக்கழகங்களின் அனுமதியை பெற்ற பின்னரே, கல்வி நிறுவனங்கள் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த முடியும்.இதையடுத்து, புத்தம் புதிய பிரிவில் நிகர்நிலை பல்கலை அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசிடம் என்.சி.இ.ஆர்.டி., கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு விதிகளின்படி, தனித்துவமான மற்றும் வளர்ந்து வரும் அறிவுத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற கல்வி நிறுனங்கள் மட்டுமே, புத்தம் புதிய பிரிவில் நிகர்நிலை பல்கலை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க முடியும்.இந்த வகையில், என்.சி.இ.ஆர்.டி.,யின் விண்ணப்பத்தை ஏற்ற மத்திய அரசு, அதற்கு நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை நேற்று அளித்தது. என்.சி.இ.ஆர்.டி.,யின் 63வது ஆண்டு விழாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதை அறிவித்தார். இதன் வாயிலாக, தனக்கென இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தவும், பாடத் திட்டங்கள், தேர்வுகள் நிர்வாகத்தில் சுயாட்சி அந்தஸ்தையும் என்.சி.இ.ஆர்.டி., பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us