தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி: செப்.,5ல் மருத்துவ படிப்பு கலந்தாய்வு

புதுச்சேரி: செப்.,5ல் மருத்துவ படிப்பு கலந்தாய்வு

புதுச்சேரி: செப்.,5ல் மருத்துவ படிப்பு கலந்தாய்வு


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் மருத்துவ படிப்பு சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளித்து, மத்திய உள்துறைக்கு அனுப்பி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் ஜிப்மரில் மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கப்படாமல் உள்ளது.இதனால், புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வை உடன் துவங்க பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கப்படும். மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான அனுமதி கோப்பு மத்திய உள்துறையில் இருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு சென்றுள்ளது. அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உள் ஒதுக்கீடு கிடைக்காத பட்சத்தில் பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்தப்படும்.மகளிர் உதவித்தொகை விண்ணப்பங்களை பரிசீலித்து பதிவு செய்வதில் தாமதமாகி வருகிறது. விரைவில் விண்ணப்பித்த அனைவருக்கும் தொகை வழங்கப்படும். காஸ் மானியம் வழங்க, புதுச்சேரியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட காஸ் இணைப்பு குறித்த விபரங்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம். அது கிடைத்ததும் நிதி உதவி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us