தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.இ.ஓ., சுற்றறிக்கை ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

டி.இ.ஓ., சுற்றறிக்கை ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

டி.இ.ஓ., சுற்றறிக்கை ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களின் பதவி உயர்வு, ஊதிய பிரச்னை, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, சங்கங்களின் சார்பில் அவ்வப்போது போராட்டம் நடத்துவர்.இந்நிலையில் போராட்டங்களுக்கு இனி அனுமதி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை திடீர் கட்டுப்பாடு விதித்துஉள்ளது. இது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அசோக்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள, அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களும், தங்களின் கோரிக்கை தொடர்பாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு, உரிய அனுமதியை பெற வேண்டும். அதாவது, காவல்துறை, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் உரிய முறையில், முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும். இதை, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்புக்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,வை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 4ம் தேதி தொடக்க கல்வி மாவட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us