UPDATED : அக் 29, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 05:00 PM
அ நிறம் | அளவு
மதுரை:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மதுரை விவசாய கல்லுாரியில் அனைத்து நிலை வேளாண் அலுவலர்களுக்கான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.மதுரை உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிறுவிவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு பிரிவு நிதி ஆலோசகர் ரவிச்சந்திரன், விற்பனைத் தொடர்பு ஆலோசகர் ஆனந்த், முன்னோடி வங்கி மேலாளர் அனில், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஹரீஷ், மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்ஸி ஜெயராணி பங்கேற்றனர்.
