UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 05:26 PM
அ நிறம் | அளவு
சென்னை:
உரிமையியல் நீதிபதி தெரிவிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நாளை தொடங்குகிறது.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில நீதிப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி தெரிவிற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ., 4 மற்றும் 5ம் தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் என இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. மொத்தம் 2,544 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
