தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் சந்திரயான் - 3

விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் சந்திரயான் - 3

விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் சந்திரயான் - 3


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில், சந்திரயான் - 3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை, அத்திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் திறந்துவைத்தார்.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவுக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை அனுப்பியது. விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.பிரஜ்ஞான் ரோவர் சாதனம் நிலவின் மேற்பரப்பில் வலம் வந்து ஆய்வு மேற்கொண்டது. இந்த நிகழ்வின் மூலம், உலக அளவில் விண்வெளி துறையில் இந்தியாவின் பெருமை ஓங்கி நிற்கிறது.இத்தகைய பெருமை மிகுந்த சந்திரயான் - 3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை இஸ்ரோ தயாரித்து, பெங்களூரு கஸ்துாரிபா சாலையில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது.இதை சந்திரயான் - 2 திட்ட இயக்குனர் வனிதா, ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி ஆகியோர் முன்னிலையில், &'சந்திரயான் - 3&' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், நேற்று பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார்.பின், அவர் கூறியதாவது:
சந்திரயான் - 3 திட்டம் வெற்றி அடைந்த பின், மாணவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த விண்கலம் எப்படி உள்ளது, அதன் செயல்பாடுகள் என்னென்ன என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் மாதிரி வடிவமைப்பு திறக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம், மேலும் துாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.பின், மாணவர்கள், பார்வையாளர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பலரும் சந்திரயான் - 3 திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பி விஞ்ஞானிகளிடம் தகவல் பெற்றனர். விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குனர் சாதனா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us