UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 02:12 PM
அ நிறம் | அளவு
சென்னை:
வரும், 2024ம் ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு கால அட்டவணையை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இந்த தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன. சுருக்கெழுத்துக்கான தேர்வு, பிப்., 10 மற்றும் ஆகஸ்ட், 10ல் துவங்கும். கணக்கு பதிவியலுக்கு, பிப்., 19, ஆக., 19; தட்டச்சுக்கு, பிப்., 24, ஆக., 24ல் தேர்வுகள் துவங்கும். தேர்வு முடிவுகள் ஏப்., 23, அக்., 22ம் தேதிகளில் வெளியாகும். கூடுதல் விபரங்களை, dte.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
