UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 09:57 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
விருதுநகர் காமராஜ் பொறியில் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக காபி வித் பிரின்ஸ்பல் எனும் நிகழ்ச்சி நடந்தது.இதில் முதலாம் ஆண்டின் மாணவர்கள் கல்லுாரியின் முதல்வர் செந்தில் உடன் கலந்துரையாடினர். இதில் மாணவர்களுக்கான தேவைகள் என்ன என்றும், மாணவர்களை வளப்படுத்த தேவையான கருத்துக்களையும் முதல்வர் வழங்கினார். இந்த சமுதாயம் இளைஞர்களுக்கான சமுதாயமாக இருக்கிறது.இளைஞர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது என்பது குறித்து பேசினார். மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முதல்வரிடம் வினா எழுப்பி அதற்கான விடைகளை பெற்றனர்.
