உலக டால்பின் தின விழா மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
உலக டால்பின் தின விழா மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 09:58 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி:
உலக டால்பின் தினத்தை முன்னிட்டு மன்னார் வளைகுடா கடலோர சுற்றுவட்டார அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நடந்தது.சாயல்குடியில் நடந்த திறனாய்வு தேர்வில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் தேர்வு எழுதினர். இரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்தது. கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வனவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக மாதம் ரூ.1000 வீதம், இரண்டாம் பரிசாக ரூ.700 வீதம், மூன்றாம் பரிசாக ரூ.500 வீதம் ஓராண்டிற்கு வழங்கப்பட உள்ளது.
