UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 09:59 AM
அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் அருகே துவராபதி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. இந்த பள்ளியை கவுரவிக்கும் விதமாக இந்திய மாணவர் சங்கம் சார்பாக நேற்று பாராட்டு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் தீபக்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ், வட்டார தலைவர் ஜான்ஸ்டீபன், செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அருணா ,ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ராணி, மாவட்ட செயலாளர் பாப்பாத்தி, தலைவர் சுமதி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் கலந்து கொண்டனர்.
