தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளை சீரமைக்க ரூ.5.61 கோடி

பள்ளிகளை சீரமைக்க ரூ.5.61 கோடி

பள்ளிகளை சீரமைக்க ரூ.5.61 கோடி


UPDATED : நவ 30, 2023 12:00 AM

ADDED : நவ 30, 2023 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2023 12:00 AM ADDED : நவ 30, 2023 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் சேதமான பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு,கழிப்பறைகள் அமைப்பது,புதிய வகுப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.5.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 17 பள்ளிகளில் செயல்படுகிறது. இந்த பள்ளிகளின் கட்டடங்கள்,வகுப்பறைகள்,கழிப்பறைகள்,தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்திருப்பதாகவும் இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதிகாரிகள் தரப்பில் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் 7 பள்ளிகளில் கட்டங்கள், தண்ணீர் தொட்டிகள்,கழிப்பறைகள் சேதமாக இருப்பது தெரிந்தது. இவற்றை சீரமைக்க மேயர் இளமதி தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டது. இதன் பணிகளை முடிக்க சிறப்பு கல்வி நிதியாக ரூ.5.61 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மேயர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us