UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 10:01 AM
அ நிறம் | அளவு
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை உயிர்தொழில்நுட்ப சிறப்பு மையத்தில், தாவர வளர்சிதை மாற்றம் என்ற தலைப்பில் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள், பல்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், தாவர வளர்சிதை மாற்றத்தின் முக்கியத்துவம், எல்.சி.எம்.எஸ்., மற்றும் ஹெச். பி.எல்.சி., இயந்திரங்களில் மாதிரிகளை உட்செலுத்தும் நெறிமுறைகள், பகுப்பாய்வு உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில், கல்லுாரி, ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். பயிற்சி துவக்கவிழாவில், உயிர் தொழில்நுட்ப சிறப்பு மைய இயக்குனர் மோகன்குமார், தாவர உயிர் தொழில்நுட்பவியல் உதவி பேராசிரியர் சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
